
தெலுங்கு படமான ‘இதே மா கதா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த டீசரை பல்வேறு பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் அஜித் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகப் படக்குழுவினர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். அதில், "எனது நீண்ட நாள் நண்பர் ராம்பிரசாத் காரு (ஒளிப்பதிவாளர்) உங்களது, ‘இதே மா கதா’ டீசரைக் காட்டினார். டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் வரும் காட்சிகளை உண்மையாகவே ரசித்தேன்.
அவற்றை எடுத்த விதமும் அருமை. எனக்கு பைக் ரைடிங் மிகவும் பிடிக்கும். அதனால், நான் உடனடியாக இந்த டீசருடன் கனெக்ட் ஆகிவிட்டேன். உங்கள் அனைவரையும் சீக்கிரமே நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். படம் வெற்றியடைய உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என அஜித் கூறியதாகப் பதிவிட்டு அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். குரு பவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுமந்த், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)